தமிழ்நாடு

ஜேசிபி வாகனத்தில் சென்று நிவாரணம் வழங்கிய அமைச்சர்!

DIN

சென்னை வேளச்சேரி பகுதியில் ஜேசிபி வாகனத்தில் சென்று அமைச்சர் எ.வ.வேலு நிவாரணப் பொருள்களை வழங்கினார்.

மிக்ஜம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் டிச. 3, 4 ஆம் தேதிகளில் பெய்த தொடர் கனமழை, கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் இன்னும் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் வேளச்சேரி, மேடவாக்கம், மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் தண்ணீர் வடியவில்லை என்பதால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

வெள்ளம் வடியாத பகுதிகளில் மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை தமிழக அரசும் பல தன்னார்வ அமைப்புகளும் வழங்கி வருகின்றன. 

பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, ஜேசிபி வாகனத்தில் சென்று மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வேளச்சேரி, மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நிவாரணம் வழங்கினார். அங்கு வீடு, வீடாகச் சென்று அவர் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரம்பரிய கலைகளுடன் களைகட்டிய குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா: ஆயிரக்கணக்கானோர் வழிபாடு

மார்க் ஸுக்கர்பெர்க் பிறந்தநாள் இன்று!

அதானிக்கு விமான நிலையங்களை கொடுக்க எத்தனை ‘டெம்போ’ பணம் வாங்குனீர்கள்? ராகுல்

தில்லி மருத்துவமனைகளுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் -நோயாளிகள் அதிர்ச்சி!

ஆம்புலன்ஸ் மின்கம்பத்தில் மோதி விபத்து: நோயாளி கருகிப் பலி!

SCROLL FOR NEXT