உத்தமபாளையம்: தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே சண்முகா நதி நீர் தேக்கத்தில் இருந்து பாசனத்திற்கு வினாடிக்கு 14.47 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
ராயப்பன்பட்டி சண்முக நதி நீர்த்தேக்கத்தில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு தேனி மாவட்ட ஆட்சியர் ஆர் .வி.ஷர்ஜீவனா தலைமை வகித்தார். கம்பம் சட்டப்பேரவை உறுப்பினர் எம். ராமகிருஷ்ணன் முன்னிலை வைத்தார். பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் மயில்வாகனன் வரவேற்றார்.
இதையும் படிக்க | 4 மாவட்டங்களில் அரசுப் பள்ளிகளை சீரமைக்க ரூ. 1 கோடி நிதி
திறந்து விடப்பட்ட பாசன நீர் ராயப்பன்பட்டி, மல்லிகாபுரம்,சின்ன வயலாபுரம், அழகாபுரி,வெள்ளையம்மாள்புரம் மற்றும் ஓடைப்பட்டி வரையில் 1640 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் பால்பாண்டி, வட்டாட்சியர் சந்திரசேகர்,சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் நிவேதா அண்ணாதுரை மற்றும் விவசாய சங்கத்தை சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.