கோப்புப்படம் 
தமிழ்நாடு

பலத்த மழை எச்சரிக்கை: தூத்துக்குடி, திருச்செந்தூர் வட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

பலத்த மழை எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி, திருச்செந்தூர் வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் சனிக்கிழமை (டிச.9) விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

DIN

தூத்துக்குடி: பலத்த மழை எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி, திருச்செந்தூர் வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் சனிக்கிழமை (டிச.9) விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் நிலவிவரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் சனிக்கிழமை (டிச.9) கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. 

அதன்படி தூத்துக்குடியில் அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. 

இதையடுத்து மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாவட்டத்தின் சில பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் காரணத்தினாலும்  மழை எச்சரிக்கை உள்ளதாலும் தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர்  வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் சனிக்கிழமை (டிச.9)  ஒரு நாள் விடுமுறை விடப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரோபோ சங்கர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

கனகாம்பரமும் தாவணியும்... ஸ்ரவந்தி சொக்கராபு!

ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து ஜெமிமா ரோட்ரிக்ஸ் விலகல்!

மோடி பிரதமரானதும் நான் வெற்றிபெற தொடங்கினேன்! பி.வி. சிந்து பகிர்ந்த கதை!

ஜிஎஸ்டி சீர்திருத்தங்களால் மக்களிடம் பணத்தின் இருப்பு அதிகரிக்கும்: நிர்மலா சீதாராமன்

SCROLL FOR NEXT