தமிழ்நாடு

கோவை அருகே போலி மதுபானம்: இருவர் கைது

DIN


கோவை மாவட்டம் காரமடை அருகே  போலி மதுபானம் விற்பனை செய்த இரண்டு பேரை போலீசார் கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம்,காரமடை அருகே  போலி மதுபானம் தயாரிப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அந்தத் தகவலின் அடிப்படையில் தொட்டிப்பாளையம் பகுதியில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.அப்போது,அங்கு ஒரு வீட்டில் அருண் மற்றும் சந்தோஷ்குமார் ஆகியோர்   போலி மதுபானம் தயாரித்தது தெரியவந்துள்ளது.சோதனையின் போது விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த போலி மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அவர்களையும் கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து அவர்களிடம்  போலீஸாா் விசாரித்தபோது, கேரளத்தை சேர்ந்த இவர்கள்,வீடு வாடகைக்கு எடுத்து கேரளத்தில் இருந்து எரிசாராயம் கடத்தி வந்து, வேதிப்பொருள்கள் கலந்து வீட்டில் மதுபானம் தயாரித்துள்ளனர். 

தயாரிக்கப்பட்ட மதுபானத்தை பாட்டிலில் அடைத்து பிரபல நிறுவனங்களின் லேபிள்களை ஒட்டியுள்ளனர்.பிறகு இதை கேரளத்துக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்து வந்துள்ளனர்.
 
மேலும், அவர்களிடம் இருந்து 1,667 மதுபாட்டில்கள், நிரப்பப்படாத பாட்டில்கள் 1,745 மற்றும் 180 லிட்டர் எரிசாராயம், ஒரு பைக் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். 

போலி மதுபானம் தயாரித்து விற்பனைக்கு செய்யும் கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டு வரும் அனில்குமார் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

சமீபகாலமாக காரமடை சுற்றுவட்டாரப் பகுதிகளில்  போலி மதுபானம் விற்பனை அதிகரித்து வருவதாக புகார் எழுந்த நிலையில், கோவில்பாளையம் - காரமடை சாலை அருகே  எழில் ரெஸ்டாரன்டில் போலி மதுபானம் விற்பனை செய்த விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT