வெள்ளத்தில் மூழ்கிய தண்டவாளம் 
தமிழ்நாடு

6 ரயில்கள் ரத்து, மாற்றுப்பாதையில் 3 ரயில்கள்

கனமழை காரணமாக தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

DIN

சென்னை: கனமழை காரணமாக தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரியில் ஞாயிற்றுக்கிழமை காலைமுதல் பெய்து வரும் கனமழை காரணமாக தண்டவாளங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் ரயில்கள் அங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது.

இதன்காரணமாக, நெல்லை – சென்னை வந்தே பாரத், திருச்செந்தூர் – பாலக்காடு, நெல்லை – ஜாம் நகர், நிஜாமுதீன் ரயில் ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.

சென்னை - நெல்லை இடையேயான விரைவு ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்திலும், சென்னை எழும்பூர் - கொல்லம் இடையேயான விரைவு ரயில் விருதுநகர் ரயில் நிலையத்திலும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை - திருச்செந்தூர் அதிவிரைவு ரயிலும்(20605), திருவனந்தபுரம் - திருச்சி விரைவு ரயிலும்(22628) முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

கொல்லம் - சென்னை இடையே இயக்கப்படும் அனந்தபுரி ரயில், கொல்லத்திலிருந்து இன்று பிற்பகல் 2.50 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக திண்டுக்கல்லில் இருந்து இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், சென்னை - கொல்லம்(20635) செல்லும் அனந்தபுரி ரயில்(20635) திண்டுக்கல், பொள்ளாச்சி வழியாக பாலக்காடுக்கு இயக்கப்படவுள்ளது.

காச்சிகுடா - நாகர்கோவில்(16353) வாராந்திர விரைவு ரயில், சேலம், ஈரோடு, பாலக்காடு, சொர்னூர், எர்ணாகுளம் வழியாக திருவனந்தபுரத்துக்கு மாற்றுப்பாதையில் இயக்கப்படவுள்ளது.

தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு ரயில்(06011) இன்று ஜோலார்பேட்டை, ஈரோடு, பாலக்காடு, எர்ணாகுளம், திருவனந்தபுரம் வழியாக நாகர்கோவிலுக்கு மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது!

ரூ. 16 லட்சம் மதிப்பிலான வீடு பரிசு! 10 மாதக் குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்!

ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் கடும் மோதல்! உருட்டுக்கட்டைகளால் தாக்குதல்!

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

SCROLL FOR NEXT