தமிழ்நாடு

ஆட்சியர் அலுவலகத்திற்குள் வெள்ளம்!

DIN

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான பாபநாசம், சேர்வாளாறு, மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகளுக்கு அதிக அளவில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை இரவு 50 ஆயிரம் கன அடிக்கு மேல் தாமிரவருணி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.

இந்த நிலையில் வெள்ளப்பெருக்கு தொடர்ந்து அதிகரித்து தாமிரவருணி ஆற்று நீர், ஆட்சியர் அலுவலகத்திற்குள் புகுந்தது. இதன் காரணமாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT