கோப்புப் படம் 
தமிழ்நாடு

கனமழை பாதிப்பு: வாட்ஸ்ஆப் எண் அறிவிப்பு!

தென் மாவட்டங்களில் பெய்யும் கனமழை பாதிப்புகளைத் தெரிவிக்க வாட்ஸ் அப், டிவிட்டர் கணக்குகளைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

DIN

தென் மாவட்டங்களில் பெய்யும் கனமழை பாதிப்புகளைத் தெரிவிக்க வாட்ஸ் அப், டிவிட்டர் கணக்குகளைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. இந்த கனமழையானது அடுத்த 24 மணி நேரத்திற்குத் தொடரும் என வானிலை ஆய்வு மையம் 
ரெட் அலர்ட் விடுத்துள்ளது. 

இந்த நிலையில், கனமழை பாதிப்புகளைத் தெரிவிக்க தமிழக அரசு வாட்ஸ்அப் எண்களை வெளியிட்டுள்ளது. மேலும் டிவிட்டர் மற்றும் முகநூல் வழியாகவும் மக்கள் தங்கள் புகார்களைத் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழக அரசின் 81485 39914 என்ற வாட்ஸ்அப் எண்ணில் மழை பாதிப்பு உதவி தேவையை மக்கள் தெரிவிக்கலாம். மேலும், @tn_rescuerelief, @tnsdma என்ற ட்விட்டர், @tnsdma என்ற பேஸ்புக் பக்கத்திலும் மழை பாதிப்பைக் குறித்துப் பதிவிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரைட்ஸ் நிறுவனத்தில் டெக்னிக்கல் உதவியாளர் வேலை: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் 9 இடங்களில் என்ஐஏ சோதனை: உணவக உரிமையாளர் கைது

தவெக மாநாட்டில் குவிந்த 2 லட்சம் பேர்! விஜய் சொல்லைக் கேட்காத தொண்டர்கள்?

ஸ்ட்ராபெர்ரி... ராய் லட்சுமி!

“இவ்வளவு பேர் வேல வெட்டி இல்லாம…” TVK தொண்டர்கள் குறித்து Seeman

SCROLL FOR NEXT