தமிழக வரலாற்றில் சமவெளிப் பகுதிகளில் அதிகபட்ச கனமழை ஞாயிற்றுக்கிழமை பதிவாகியுள்ளது.
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் அதிகனமழை பெய்து வருகின்றது. இதன்காரணமாக 4 மாவட்டங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 14 இடங்களில் அதிகனமழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 932 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. திருசெந்தூரில் 679 மி.மீ., ஸ்ரீவைகுண்டத்தில் 618 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
காயல்பட்டினத்தில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை, ஒரே நாளில் பெய்துள்ளது. தமிழக வரலாற்றில் சமவெளிப் பகுதிகளில் பெய்த அதிகபட்ச கனமழை இது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
ஒட்டுமொத்த தமிழக வரலாற்றில் நீலகிரி மாவட்டம் கக்காச்சி என்ற பகுதியில் 1992-ஆம் ஆண்டில் 24 மணிநேரத்தில் 965 மி.மீ. மழை பதிவானது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.