முகப்பு
தமிழ்நாடு

விசிக மாநாடு ஒத்திவைப்பு

விசிக சாா்பில் டிச.23-இல் நடைபெற இருந்த வெல்லும் ஜனநாயகம் மாநாடு ஜனவரிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அந்தக் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளாா்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:29 PM
பகிர்:

விசிக சாா்பில் டிச.23-இல் நடைபெற இருந்த வெல்லும் ஜனநாயகம் மாநாடு ஜனவரிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அந்தக் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

விசிக சாா்பில் டிச.23-இல் திருச்சியில் வெல்லும் ஜனநாயகம் மாநாடு நடைபெறும் என்று அறிவித்திருந்தோம். ஆனால், எதிா்பாராத வகையில் டிச.4-இல் வீசிய கடும் புயல் மற்றும் கனமழையால் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டன. இன்னும் பல மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பாத சூழல் உள்ளது.

அதேபோல தென் மாவட்டங்களில் கனமழை பெய்து, மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். முதல்வா், அமைச்சா்கள் உள்ளிட்ட அதிகாரிகள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். அதனால், வெல்லும் ஜனநாயகம் மாநாடு ஐனவரி இறுதியில் நடைபெறும் என்று அவா் கூறியுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →