தமிழ்நாடு

சென்னை-தூத்துக்குடி இடையே ரயில் சேவை தொடங்கியது!

சென்னை-தூத்துக்குடி இடையே நான்கு நாள்களுக்கு பிறகு  வெள்ளிக்கிழமை (டிச.22) மீண்டும் ரயில் சேவை தொடங்கியது.

DIN

சென்னை-தூத்துக்குடி இடையே நான்கு நாள்களுக்கு பிறகு  வெள்ளிக்கிழமை (டிச.22) மீண்டும் ரயில் சேவை தொடங்கியது.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் சமீபத்தில் பெய்த மிகப் பலத்த மழையால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. பல இடங்களில் ரயில் தண்டவாளங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால், இந்தப் பகுதிகளில் தொலை தூர ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

தற்போது மழை நின்று வெள்ளம் வடிந்து வரும் நிலையில், இந்தப் பகுதிகளில் ரயில் பாதைகளில் தண்டவாளங்களை விரைந்து சீரமைத்து, ரயில்களை இயக்க தென்னக ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ரயில் பாதைகளை சீரமைக்க மணல் மூட்டைகள், ஜல்லிக் கற்கள் தேவைப்படுகின்றன. இதற்காக மானாமதுரை ரயில் நிலையத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த மணலை சாக்குப் பைகளில் நிரப்பும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், சென்னை-தூத்துக்குடி இடையே நான்கு நாள்களுக்கு பிறகு  வெள்ளிக்கிழமை (டிச.22) மீண்டும் ரயில் சேவை தொடங்கியது.

வியாழக்கிழமை இரவு சென்னையில் இருந்து புறப்பட்ட முத்துநகர் விரைவு ரயில் வெள்ளிக்கிழமை காலை 6.15 மணியளவில் தூத்துக்குடி சென்றடைந்தது. ரயில் சேவை தொடங்கியதை அடுத்து பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மழை பாதிப்புகள் சீர் செய்யப்பட்ட நிலையில், தூத்துக்குடி செல்லும் ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரானை நோக்கி அமெரிக்காவின் மிகப்பெரிய படை! டிரம்ப்

சமூக ஊடக பிரபலமாகப் பெற்றோா் எதிா்ப்பு: வீட்டைவிட்டு சிறுவன் வெளியேறிய பெங்களூரில் மீட்பு

புதிய ஊரக வேலைச் சட்டத்துக்கு எதிராக ஏழைகள் ஒன்று திரள வேண்டும் - ராகுல் காந்தி வலியுறுத்தல்

புதிய ஓய்வூதிய திட்டத்தால் 23 ஆண்டு கால பிரச்னைக்கு தீா்வு - முதல்வா் மு.க.ஸ்டாலின்

சி. வி. சண்முகம் எம்.பி.க்கு எதிரான வழக்கு ரத்து

SCROLL FOR NEXT