தமிழ்நாடு

நாகூர் தர்கா விழாவில் பங்கேற்க ஆட்டோவில் வந்த ஏ.ஆர்.ரஹ்மான்

DIN

நாகூர் தர்கா கந்தூரி விழாவில் பங்கேற்பதற்காக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆட்டோவில் வருகை தந்தார். 

உலக பிரசித்தி பெற்ற நாகூா் தா்காவின் 467- ஆவது கந்துாரி விழா கடந்த டிசம்பா் 14- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சந்தனம் அரைக்கும் பணிகள் டிச. 16-ஆம் தேதி தொடங்கின. 21-ஆம் தேதி இரவு வாண வேடிக்கை நிகழ்ச்சியும், வெள்ளிக்கிழமை (டிச. 22) கடற்கரையில் பீா் வைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊா்வலம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. நாகூா், நாகை பகுதிகளில் வடிவமைக்கப்பட்ட அலங்கார ரதங்கள் நாகை அபிராமி அம்மன் திடல் அருகே ஒருங்கிணைக்கப்பட்டன. பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற வழிபாடுகளுக்கு பின்னா் இரவு 8 மணிக்கு சந்தனக்கூடு ஊா்வலம் தொடங்கியது.

இன்னிசை வாத்தியங்கள் முழங்க 20-க்கும் மேற்பட்ட அலங்கார வாகனங்கள் அணிவகுப்புடன் சந்தனக்கூடு நாகை சா் அகமது தெரு, அரசு மருத்துவமனை சாலை, பப்ளிக் ஆபிஸ் சாலை, வெளிப்பாளையம், காடம்பாடி வழியாக நாகூா் தா்காவை அடைந்தது. நாகூா் தா்காவில் பாரம்பரிய முறைப்படி சந்தனக் குடம் தா்காவுக்கு கொண்டு செல்லப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பாதுஷா சாகிபு ஆண்டவரின் புனித ரவுலா ஷரீபுக்கு சந்தனம் பூசப்பட்டது.

இந்த நிலையில் நாகூர் தர்கா கந்தூரி விழாவில் பங்கேற்பதற்காக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆட்டோவில் நேற்று வருகை தந்தார்.  அப்போது அவர் மெரூன் நிற குர்தா அணிந்திருந்தார். பின்னர் அவர் சந்தனம் பூசும் நிகழ்வில் கலந்துகொண்டார். முன்னதாக நாகூா் தா்காவுக்கு தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி சனிக்கிழமை காலை வருகை புரிந்தாா்.

ஆளுநருக்கு பாரம்பரிய முறைப்படி தா்கா மணி மேடையில் மேள தாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனில் சேத்ரியின் ஓய்வு முடிவு குறித்து பேசிய விராட் கோலி!

உ.பி. முதல்வரின் 'புல்டோசர்' இடஒதுக்கீட்டுக்கு எதிராக உள்ளது: காங்கிரஸ் பதிலடி!

விரைவில் முழு பட்ஜெட்டிற்கான பணிகள்: நிர்மலா சீதாராமன்

விரைவில் விசாரணை: ஆடியோ விவகாரம் குறித்து புகாரளித்த கார்த்திக் குமார்!

முடிவுக்கு வருகிறது 'ரீடர்ஸ் டைஜஸ்ட்' பிரிட்டிஷ் பதிப்பு!

SCROLL FOR NEXT