முகப்பு
தமிழ்நாடு

தூத்துக்குடி செல்கிறார் நிர்மலா சீதாராமன்!

மழை மற்றும் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய நாளை மறுநாள் (டிச. 26) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தூத்துக்குடி செல்கிறார்.

Updated On : 24 டிசம்பர், 2023 at 8:48 AM
கோப்புப்படம்
பகிர்:

மழை மற்றும் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய நாளை மறுநாள் (டிச. 26) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தூத்துக்குடி செல்கிறார்.

கடந்த 17, 18 ஆகிய 2 நாள்கள் பெய்த கனமழையால் தூத்துக்குடி மாநகரின் பெரும்பாலான இடங்களில் மழைநீா் சூழ்ந்துள்ளது. குடியிருப்புகளுக்குள் மழைநீா் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தேசிய பேரிடா் மேலாண்மைக் குழு ஆலோசகா் கா்னல் கே.பி.சிங் தலைமையிலான மத்திய குழுவினா் 6 போ் தூத்துக்குடிக்கு வந்து வெள்ள பாதிப்புகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தனர். 

Advertisement

இந்த நிலையில், சென்னை மழை பாதிப்பை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிட்ட நிலையில், தூத்துக்குடிக்கு செல்கிறார் நிர்மலா சீதாராமன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.