தமிழ்நாடு

கனமழை எச்சரிக்கை: நெல்லையில் நீர்த்தேக்கங்களிலிருந்து நீர்திறப்பு

பாபநாசம் உள்ளிட்ட நீர்த்தேக்கங்களிலிருந்து முன்னெச்சரிக்கையாக நீர் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN


நெல்லை: டிசம்பர் மாத இறுதி நாள்களில், தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், பாபநாசம் உள்ளிட்ட நீர்த்தேக்கங்களிலிருந்து முன்னெச்சரிக்கையாக நீர் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருக்கும் உத்தரவில், கனமழை எச்சரிக்கை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணிமுத்தாறு, பாபநாசம், சேர்வலாறு நீர்த்தேக்கங்களிலிருந்து மொத்த நீர் திறப்பு தற்போது 2000 கன அடியாக அதிகரிக்கப்படுகிறது. 

இது படிப்படியாக 5000 கன அடியாக இன்று மாலைக்குள் அதிகரிக்கப்படும். மழை மற்றும் நீர்வரத்தைப் பொறுத்து நீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்படும் என்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

முன்னதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை விடுத்திருந்த செய்திக் குறிப்பில்,

டிசம்பர் 30ஆம் தேதி தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

டிசம்பர் 31ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

01.01.2024 மற்றும் 02.01.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அஜீத் பவார் மனைவிக்கு துணை முதல்வர் பதவி?

துடரும் கூட்டணி! புதிய படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் மோகன் லால்!

முதல் டி20: ஆடம் ஸாம்பா அபார பந்துவீச்சு; ஆஸி.க்கு 169 ரன்கள் இலக்கு!

ஆன்லைனில் இந்த தயாரிப்புகளை வாங்க வேண்டாம்!

மத்திய பட்ஜெட்! அதிக முறை தாக்கல் செய்தவரும் மிகச் சிறிய பட்ஜெட்டும்!

SCROLL FOR NEXT