பசியாற்றிய வள்ளல் விஜயகாந்த்: இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான்
பசியாற்றிய வள்ளல் விஜயகாந்த் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
பசியாற்றிய வள்ளல் விஜயகாந்த் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர். ரஹ்மான் அவரது எக்ஸ் பக்கத்தில், "திரைத்துறையில், கதாநாயகனாக தான் உண்ணும் அதே தரமான உணவே எல்லோருக்கும் வழங்கப்பட வேண்டும் என்று போராடி வென்றார். பசியாற்றிய வள்ளல் என்று இன்று எல்லோரும் அவரைப் புகழ்வது நெகிழ்ச்சியாக இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் மறைவையொட்டி சினிமாத் துறையைச் சேர்ந்த பலரும் தங்கள் இரங்கல்களைப் பதிவு செய்து வருகின்றனர். பல நடிகர்கள் நேரில் சென்று விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் உருக்கமாக பேசி வருகின்றனர்.
இதையும் படிக்க: விஜயகாந்த்தின் உடல் தீவுத்திடலில் வைக்கப்படும்: தேமுதிக
அரசியல் கட்சியனரும் நேரில் சென்று விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.