தமிழ்நாடு

நீலகிரியில் சிறுத்தை தாக்கிய பெண் உயிரிழப்பு!

DIN

பந்தலூர் பகுதியில் சிறுத்தை தாக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்தார்.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் சில தினங்களுக்கு முன்பு சரிதா என்ற பெண்ணை சிறுத்தை தாக்கியது. அதைத் தொடர்ந்து அங்குள்ளவர்கள் சரிதாவை மீட்டு உதகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக நேற்று முன்தினம் கோவை அரசு மருத்துவமனையில் சரிதா அனுமதிக்கப்பட்டார். 

இதனிடையே கொளப்பள்ளி சுற்றுப்பகுதியில் மேலும் மூன்று பேரை சிறுத்தை தாக்கியதால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் கூண்டு வைத்தும் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியும் சிறுத்தையை பிடிப்பதற்கு வனத்துறை அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சிறுத்தை தாக்கி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரிதா இன்று உயிரிழந்தார். சரிதாவின் உயிரிழப்பு உறவினர்கள் மத்தியிலும் ஊர் மக்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

இந்நிலையில் பத்து நாள்கள் மேலாகியும் அப்பகுதியில் உலாவி வரும் சிறுத்தை பிடிபடாததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.  வனத்துறையினர் விரைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு சிறுத்தையை உடனடியாக பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்வாதி மாலிவால் கூறியது போல் எதுவும் நடக்கவில்லை: தில்லி அமைச்சர் அதிஷி விளக்கம்

பிரான்ஸில் சோபிதா துலிபாலா..

சிஏஏ என்பது வெறும் கண்துடைப்பு: மம்தா பானர்ஜி!

மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி பாடல் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா? மின் வாரியம் விளக்கம்

SCROLL FOR NEXT