முகப்பு
தமிழ்நாடு

சிதம்பரத்தில் திருநீலகண்ட நாயனார் சிலை மாயம்

சிதம்பரத்தில் திருநீலகண்ட நாயனார் சிலை மாயமானதை தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2023 at 10:22 AM
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 11:53 AM

சிதம்பரம்:  சிதம்பரத்தில் திருநீலகண்ட நாயனார் சிலை மாயமானதை தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற இளமையாக்கினார் கோயில் உள்ளது. இந்த கோவில் சிவபெருமான், சிவயோகியார் வடிவத்தில் வந்து திருநீலகண்ட நாயனார், ரத்தினாசளை தம்பதியினருக்கு திருவோடு கொடுத்து இளமையாக்கியதாக வரலாறு கூறுகிறது.

சிலை இருந்த போது எடுத்த படம்
இளமையாக்கினார் கோவில்

இந்நிலையில் கோயில் வெளிப்பிரகாத்தில் இருந்த திருநீலகண்ட நாயனார் - ரத்னா சாலை தம்பதியர் சிலை காணாமல் போய்விட்டது.

Advertisement

இதுகுறித்து கோயில் டிரஸ்டி பழனியப்பா செட்டியார் அளித்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீஸார் மற்றும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.