முகப்பு
தமிழ்நாடு

அவிநாசி: தருமபுரி ஆட்சியரின் பெற்றோர் வீட்டில் கொள்ளை

அவிநாசி அருகே தருமபுரி ஆட்சியரின் பெற்றோர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:24 AM
பகிர்:

அவிநாசி அருகே தருமபுரி ஆட்சியரின் பெற்றோர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அவிநாசி அருகே மங்கரசுவளைய பாளையம் ஊராட்சி லூர்துபுறம் பிள்ளையார் கோயில் தோட்டத்தை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (86). இவரது மனைவி சரஸ்வதி (78).

இவர்கள் இருவரும் தனியாக தோட்டத்தில் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் ரமேஷ் குமார் அவிநாசியில் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். மூத்த மகள் ராதா லட்சுமி துடியலூர் அரசு பள்ளியில் ஆசிரியராகவும், இளைய மகள்  சாந்தி தருமபுரி மாவட்ட ஆட்சியராகவும் உள்ளார்.  

முதியவர்கள் தனியாக தோட்டத்தில் வசித்து வரும் நிலையில், வியாழக்கிழமை திருப்பி பிடியால் தாக்கி, வீட்டிலிருந்த 7 பவுன் தங்க நகை, ரொக்கப் பணம் ரூ.7000 ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த சேவூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →