தமிழ்நாடு

அவைத் தலைவர் தமிழ் மகன் உசேனுக்கு கையெழுத்திடும் அதிகாரம்: அதிமுக பொதுக்குழு

DIN


சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கீடு தொடர்பான படிவத்தில் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் கையெழுத்திட அதிமுக பொதுக்குழு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது.

சென்னை ராயப்பேட்டையில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில், ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அறிவித்த வேட்பாளர் தென்னரசுவை வேட்பாளராக அறிவிக்கவும் அதிமுக பொதுக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இது குறித்து, அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன்  தேர்தல் ஆணையத்துக்கு முறைப்படி அறிவிக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இது மட்டுமின்றி. இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கீடு செய்வதற்கு தேவையான ஏ, பி படிவத்தில் கையெழுத்திடுவதற்கான அதிகாரம் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேனுக்கு வழங்கி அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு செய்த மூத்த அரசியல் தலைவர்கள்

திமிரும் தன்னடக்கமும்...!

வார இறுதி நாட்கள் - மெட்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு 3 விதமான பணிநேரங்கள்: மக்கள் நல்வாழ்வுத் துறை

நாட்டு நடப்பு!

SCROLL FOR NEXT