சைலேந்திர பாபு (கோப்புப் படம்) 
தமிழ்நாடு

இரிடியம் முதலீட்டு மோசடி அதிகரிப்பு: டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இரிடியம் முதலீடு மோசடி அதிகரித்து வருவதாக தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு எச்சரித்துள்ளார்.

DIN



சென்னை: தமிழ்நாட்டில் இரிடியம் முதலீடு மோசடி அதிகரித்து வருவதாக தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு எச்சரித்துள்ளார்.

இரிடியம் முதலீடு என்ற பெயரில் மோசடி கும்பல் பொதுமக்களை ஏமாற்றி வருவதாக டிஜிபி சைலேந்திர பாபு வெள்ளிக்கிழமை விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் விழிப்புணர்வு காணொளி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில், பொதுமக்கள் ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.3 கோடி வரை லாபம் கிடைக்கும் என்று கூறி கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருகிறது.

மேலும், சேலம், கன்னியாகுமரி மாவட்டங்களில் இதுபோன்ற மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கேரள போலீசார் தமிழகத்தில் உள்ள சக அதிகாரிகளுக்கு ஒரு சில புகார்களை அனுப்பியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதுபோன்ற முதலீடுகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றும், உழைத்து சம்பாதித்த பணத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும் சைலேந்திர பாபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT