வேதாரண்யம் கோயிலுக்கு நெல் கோட்டையுடன் வந்த குன்னலூர் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு. 
தமிழ்நாடு

தைப்பூசம்: வேதாரண்யம் வேதாரண்யேசுவரர் கோயிலுக்கு நெல் கோட்டைகளை வழங்கிய விவசாயிகள்

நாகை மாவட்டம் வேதாரண்யம் வேதாரண்யேசுவரர் கோயிலுக்கு தைப்பூச நாளில் விவசாயிகள் நெல் மணிகளை கோட்டைக்கட்டி வழங்கும் நிகழ்ச்சி இன்று (பிப்.5) நடைபெற்றது.

DIN

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் வேதாரண்யேசுவரர் கோயிலுக்கு தைப்பூச நாளில் விவசாயிகள் நெல் மணிகளை கோட்டைக்கட்டி வழங்கும் நிகழ்ச்சி இன்று (பிப்.5) நடைபெற்றது.

வேதாரண்யம் வேதாரண்யேசுவரர் கோயிலுக்கு திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள குன்னலூர் கிராமத்தில் சுமார் 200 ஏக்கர் நிலம் சொந்தமாக உள்ளது. இந்த நிலத்தில் குத்தகை முறையில் நெல் சாகுபடி  செய்யும் விவசாயிகள்  முதல் அறுவடையாக செய்யப்படும்  நெல்லை  கோயிலுக்கு வழங்குவது வழக்கம்.

நெற்கதிர்களை படைக்க ஏற்ற நாளான  தைப்பூச நாளில் கோட்டையாக கட்டி கோயிலுக்கு வழங்கும் நிகழ்வு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் விவசாயிகள்  கொண்டுவந்த கோட்டைகள்  வேதாரண்யம் மேலவீதியில் உள்ள களஞ்சிய விநாயகர் கோயிலில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

பின்னர்  நாதசுவரம், மேளம் முழங்க  முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்று கோயிலில் ஒப்படைத்தனர். கோயிலில் நெல் கோட்டைக்கு சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டது. பக்தர்களுக்கு  நெல் கதிர்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாம்பன் மீனவர்கள் 10 பேர் கைது!

ஆற்காடு நகராட்சி அலுவலகத்தில் விடியவிடிய லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை: ரூ.79,000 பறிமுதல்

திருப்பூர் அருகே அதிமுக எம்எல்ஏ தோட்டத்தில் எஸ்.ஐ. வெட்டிக் கொலை!

சிறுமி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை!

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: நலத் திட்ட உதவிகள் வழங்கினாா் எம்எல்ஏ

SCROLL FOR NEXT