அமராவதி அணை (கோப்புப் படம்) 
தமிழ்நாடு

கரூர், திருப்பூரில் அமராவதி அணை நீர் திறப்பு காலம் நீட்டிப்பு!

கரூர், திருப்பூரில் சம்பா சாகுபடிக்காக அமராவதி அணையிலிருந்து நீர் திறப்பு காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

DIN


கரூர், திருப்பூரில் சம்பா சாகுபடிக்காக அமராவதி அணையிலிருந்து நீர் திறப்பு காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களை சார்ந்த 10 அமராவதி பழைய வாய்க்கால்களின் பாசனப் பரப்புகளில் கதிர் நிலையில் உள்ள நெற்பயிற்களுக்காக நீட்டிக்கப்பட்டுள்ளது.

கரூரில் பிப்ரவரி 8 முதல் 28 வரை சம்பா சாகுபடிக்காக, காலநீட்டிப்பு செய்து, தகுந்த இடைவெளிவிட்டு 691.20 மில்லியன் கன அடிக்கு மிகாமலும், 

திருப்பூர் மாவட்டத்திலுள்ள அமராவதி பிரதானக் கால்வாய் பாசனப் பரப்புகளில் கதிர் நிலையில் உள்ள நெற்பயிர்களுக்கு  பிப்ரவரி 8 முதல் 28 முடிய சம்பா சாகுபடிக்காக, கால நீட்டிப்பு செய்து, தகுந்த இடைவெளிவிட்டு 532.22  மில்லியன் கன அடிக்கு மிகாமலும், அமராவதி ஆற்றின் மதகு வழியாக அமராவதி அணையிலிருந்து  தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.

இதனால், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களிலுள்ள 47,117 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளியில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் என்ன வித்தியாசம்? ரசிகை ஆவேசம்

Untitled Nov 03, 2025 10:37 pm

இறுதி வரை முன்னேறினாலும்... தென்னாப்பிரிக்காவைத் துரத்தும் சோகம்!

கொண்டாட்ட நாள்... சம்யுதா!

SCROLL FOR NEXT