FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

புதுமைப்பெண் 2-ம் கட்ட திட்டம்: முதல்வர் தொடக்கிவைத்தார்!

புதுமைப்பெண் திட்டத்தின் 2 ஆம் கட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று(புதன்கிழமை) தொடக்கி வைத்தார்.

Updated On : 8 பிப்ரவரி 2023, 1:43 pm IST
பகிர்:

புதுமைப்பெண் திட்டத்தின் 2 ஆம் கட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று(புதன்கிழமை) தொடக்கி வைத்தார்.

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்து உயா் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி தொடக்கி வைத்தார். 

இதன் மூலமாக தற்போது உயர்கல்வி பயிலும் 1.13 லட்சம் மாணவியர் இந்தத் திட்டத்தில் உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர். 

இந்நிலையில் புதுமைப்பெண் திட்டத்தின் 2 ஆம் கட்டத்தை திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் இந்து கல்லூரியில் நடைபெறும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கிவைத்தார். 

இதன்பின்னர் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த புதுமைப்பெண் திட்டத்தினால் உயர்கல்வி சேர்க்கை 27% ஆக அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments