முகப்பு
தமிழ்நாடு

ஈரோடு இடைத்தேர்தல்: முதியவர்களிடம் தபால் வாக்கு பெறும் பணி தொடங்கியது!

ஈரோடு கிழக்கு தொகுதியில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடம் தபால் வாக்கு பெறும் பணி தொடங்கியுள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:31 AM
பகிர்:

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடம் தபால் வாக்கு பெறும் பணி தொடங்கியுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் சிரமமின்றி வாக்கு செலுத்துவதற்கு ஏதுவாக இம்முறை வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கும் திட்டம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் மட்டும் 80 வயதுக்கு மேற்பட்ட முதிய வாக்காளர்கள் 321 பேர், மாற்றுத்திறனாளிகள் 31 பேர் உள்ளனர். இவர்களின் வாக்குகளை பெற 6 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுக்கள் வாக்காளர்களின் வீட்டுக்குச் சென்று அவர்களிடம் தபால் வாக்குகளை பெறவுள்ளனர். இரண்டு நாள்களுக்குள் இந்த பணியை முடிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →