கே.பி.முனுசாமி 
தமிழ்நாடு

அதிமுக சீட்டுக்கு ரூ. 1 கோடி பேரம்? - கே.பி. முனுசாமி மீது ஓபிஎஸ் தரப்பு குற்றச்சாட்டு

கொளத்தூர் தொகுதி சீட் பெற்றுத்தர கே.பி.முனுசாமி ஒரு கோடி ரூபாய் கேட்டதாக ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஆடியோ வெளியிட்டு புகார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

DIN

அதிமுக நிர்வாகிகள் நியமனத்துக்கு கே.பி.முனுசாமி ஒரு கோடி ரூபாய் கேட்டதாக ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஆடியோ வெளியிட்டு புகார் தெரிவித்துள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம்- எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இரு அணிகளும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றன.

இரு தரப்பினரும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி வரும் நிலையில், தற்போது இபிஎஸ் தரப்பு ஆதரவாளரான கே.பி.முனுசாமி மீது ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். 

அதிமுக நிர்வாகிகள் நியமனத்துக்கு கே.பி.முனுசாமி ஒரு கோடி ரூபாய் கேட்டதாக ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஆடியோ வெளியிட்டுள்ளார். 

ஆடியோவில், முதலில் 50 தயார் செய்துள்ளேன், மாலைக்குள் மீதி 50  - யை தயார் செய்கிறேன் என்று கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, கே.பி. முனுசாமியிடம் கூறுகிறார். பின், பணத்தை பெற்றுக்கொள்ள தனது மகனை அனுப்புவதாக கே.பி.முனுசாமி கூறுகிறார். 

ஆடியோ வெளியிட்டு அதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, 'கே.பி. முனுசாமி பற்றி தொண்டர்களுக்கு தெரிய வேண்டும் என்பதால் இந்த ஆடியோவை வெளியிட்டுள்ளேன். இந்த ஆடியோவுக்கு பதில் தராவிட்டால் விடியோவையும் வெளியிடுவேன். மேலும் தங்கமணி, வேலுமணி குறித்த விடியோவையும் வெளியிடுவேன்.

கே.பி. முனுசாமி இன்று ஓபிஎஸ்ஸை குறை சொல்கிறார். அவர் பணத்துக்காக வேலை செய்பவர்' என்று கடுமையாக சாடியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இயக்குநராகும் ஜித்து மாதவன் மனைவி!

நண்பர்களிடையே கருத்து வேறுபாடு இயல்பு! டிரம்ப் - மோடி குறித்து அமெரிக்க தூதர்!

இந்த அறிகுறிகள் எல்லாம் இருக்கிறதா? மன அழுத்தமாக இருக்கலாம்!

வா வாத்தியார் அவர்களுக்கான படம் கிடையாது... நலன் குமாரசாமி!

நமக்குள் பிளவை அனுமதிக்காதீர்: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT