தமிழ்நாடு

 திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கு: முக்கிய குற்றவாளி கைது!

DIN

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளி ஒருவர் ஹரியாணாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மண்டல ஐ.ஜி.கண்ணன் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை, கலசப்பாக்கம், போளூா் பகுதிகளில் இயங்கி வந்த 4 ஏடிஎம் மையங்களில் கடந்த 12-ஆம் தேதி அதிகாலை புகுந்த மா்ம கும்பல், பணம் வழங்கும் இயந்திரங்களை உடைத்து ரூ.75 லட்சத்தை திருடிச் சென்றது.

இதில் ஈடுபட்டவா்களைப் பிடிக்க 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தனிப்படையினா் ஆந்திரம், கா்நாடகம், ஹரியாணா மாநிலங்களில் முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

4 ஏடிஎம் மையங்களிலும் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் மா்ம கும்பலின் உருவம் சரியாக பதிவாகவில்லை. எனவே, தேவையான தடயம் கிடைக்குமா? என்ற நோக்கில் திருவண்ணாமலை நகரம், கிரிவலப் பாதையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை காவல் துறையினர் தொடா்ந்து ஆய்வு செய்து வருகின்றனா்.

இதுகுறித்து ஐஜி கண்ணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஹரியாணாவில் உள்ள கொள்ளையர்களை பிடிக்க அம்மாநில காவல் துறையினர் உதவுகின்றனர். திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளி ஒருவர் ஹரியாணாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏடிஎம் கொள்ளை வழக்கில் கைதான நபரிடம் சக கொள்ளையர்கள் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளையர்கள் கர்நாடகத்தின் கோலார் பகுதியில் தங்கி இருந்து பின்னர் திருவண்ணாமலை  வந்து கொள்ளையடித்துள்ளனர்.

கொள்ளை நிகழ்வுக்கு பின் மீண்டும் பெங்களூரு சென்று விமானம் மூலம் கொள்ளையர்கள் ஹரியாணாவுக்கு தப்பியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து ஒத்திவைப்பு! பயணிகள் அதிர்ச்சி!

ஆஹா... ஞாயிறு!

காஸாவில் போர் முடிவுக்கு வருகிறதா? ஐ.நா. பொதுச் செயலர் விடியோ வெளியீடு

வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பு: கண்காணிப்பு பணிகள் தீவிரம்!

ஸ்டார் முதல்நாள் வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT