தமிழ்நாடு

புதுக்கோட்டையில் அரிதான நிகழ்வு: ஒரே நேரத்தில் இரண்டு கன்றுகளை ஈன்ற பசு!

DIN

இலுப்பூர் தனியார் வேளாண்மை கல்லூரியில் வளர்த்து வந்த பசு ஒன்று  ஒரே பிரசவத்தில் இரண்டு கன்றுகளை ஈன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் மதர் தெரசா வேளாண்மை கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு வகையான பசு, காளை மாடுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இதில் எச்எப் என்ற நான்கு வயது நிரம்பிய உயரக பசு சினையாக இருந்தது. 

இந்த நிலையில், அந்த பசு மாடு நள்ளிரவில் பிரசவித்து அதில் முதலில் காளை கன்று ஒன்றை ஈன்றது. தொடர்ந்து  மீண்டும் ஒரு பசு கன்றையும் ஈன்றது. வழக்கமாக பசு மாடுகள் அனைத்தும் ஒரு பிரசவத்தில் ஒரே ஒரு கன்று தான் ஈனும். 

ஆனால் இலுப்பூர் தனியார் வேளாண் கல்லூரியில் வளர்த்த பசுமாடு இரண்டு கன்றுகளை ஈன்றுள்ளது என்பது கல்லூரி மாணவர்களிடம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

பசுவும் கன்றுகளும் தற்போது நலமாக உள்ளனர். பெரும்பாலான மாணவர்கள் பசுவின் முன்னால் நின்று சுயபடம் எடுத்துச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

களக்காடு கோயிலில் வைகாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

சாரங்கபாணி கோயில் ஹேமரிஷி மண்டபத்தில் குடமுழுக்கு

மருத்துவ நட்சத்திரம் விருது

நெல்லை காவல்துறையினருக்கு சிறப்பு பயிற்சி முகாம்

மேலப்பாளையத்தில் கண் மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT