தமிழ்நாடு

குடியாத்தம் அருகே புளிய மரத்திலிருந்து கொட்டிய தண்ணீர்!

சாலையோரத்தில் உள்ள புளிய மரத்தில்  தண்ணீர் கொட்டியதை வாகன ஓட்டிகள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.

DIN

சாலையோரத்தில் உள்ள புளிய மரத்தில்  தண்ணீர் கொட்டியதை வாகன ஓட்டிகள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரயில்வே மேம்பாலம் அருகே  வேப்பூர் பகுதியில், குடியாத்தம் - வேலூர் நெடுஞ்சாலையில்  உள்ள புளிய மரத்தில் சுமார் நான்கடி உயரத்தில் புளிய மரத்தில் நடுவே தண்ணீர் அருவி போல் கொட்டியுள்ளது

இதைக் கண்ட சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் வாகனத்தை நிறுத்தி ஆச்சிரியத்துடன் பார்த்து தங்கள் செல்போன்களில் பதிவு செய்தனர். மேலும் புளிய மரத்தின் அருகே குடிநீர் குழாய் செல்வதால், குடிநீர் குழாயில் சேதம் ஏற்பட்டு, அந்த நீர் புளிய மரத்திலிருந்து வரலாம் எனத் தெரிகிறது.

புளிய மரத்தில் திடீரென அருவி போல் கொட்டிய நீரை  அப்பகுதி மக்கள் ஆச்சிரியத்துடன் வந்து பார்த்து செல்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

செங்கல் சூளையை மூடக் கோரி ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT