தமிழ்நாடு

பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு: 2 திமுகவினர் கைது; கட்சியிலிருந்து நீக்கம்

DIN

பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இரண்டு திமுகவினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.

சென்னை விருகம்பாக்கத்தில் திமுக சாா்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக இளைஞா் அணியைச் சோ்ந்த ஏகாம்பரம் மற்றும் பிரவீன் ஆகிய இருவரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும், இருவரையும் காவல் துறையினா் மடக்கிப் பிடித்தபோது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், பின்னா் ஆளும் கட்சியினரின் தலையீட்டைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் காவல் துறையினா் கைது செய்யாமல் விட்டதாக கூறப்படுகிறது.

இதனைக் கண்டித்து பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், இளைஞரணியை சேர்ந்த இருவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்குவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, இருவரையும் கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து அவர்களுக்கு நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய மக்களவையில் முஸ்லிம்களுக்குக் கூடுதல் இடங்கள் கிடைக்குமா?

மோடியைப் போல பாகிஸ்தானுக்கும் தலைவர் வேண்டும்: தொழிலதிபர் சஜித் தரார்

வள்ளிமலையில் 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு மீட்பு

அரசு விரைவுப் பேருந்தில் கைத்துப்பாக்கி, அரிவாள்: காவல்துறை விசாரணை

உதகை தொட்டபெட்டா சிகரம் செல்லத் தடை!

SCROLL FOR NEXT