முகப்பு
தமிழ்நாடு

ராமேஸ்வரம்: காணாமல்போன 4 மீனவர்கள் 3 நாட்களுக்குப் பின் பாதுகாப்பாக மீட்பு!

ராமேஸ்வரம் மண்டபம் அருகே காணாமல் போன 4 மீனவர்கள் 3 நாட்களுக்குப் பின் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். 

Updated On : 7 ஜனவரி, 2023 at 10:47 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:09 AM

ராமேஸ்வரம் மண்டபம் அருகே காணாமல் போன 4 மீனவர்கள் 3 நாட்களுக்குப் பின் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். 

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே கோயில்வாடி மீன்பிடி தளத்தில் இருந்து 4 மீனவர்கள் புதன்கிழமை கடலுக்குச் சென்றனர். அடுத்த நாள் பிற்பகல் வரை அவர்கள் கரை திரும்பவில்லை. 

இதையடுத்து, காணாமல் போன மீனவர்களைத் தேடி சக மீனவர்கள் சென்ற நிலையில் 3 நாட்களுக்குப் பிறகு 4 மீனவர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். 

Advertisement

படகில் ஏற்பட்ட பழுது காரணமாக மீனவர்கள் நெடுந்தீவு அருகே தத்தளித்துக் கொண்டிருந்தனர். இதையடுத்து சக மீனவர்கள் அவர்களை பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.