கோப்புப் படம் 
தமிழ்நாடு

பேரவையில் ஆளுநரை அவமதிப்பது மரபுக்கு எதிரானது: இபிஎஸ்

சட்டப்பேரவையில் ஆளுநரை அவமதிக்கும் வகையில் நடந்துகொள்வது மரபுக்கு எதிரானது என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார். 

DIN

சட்டப்பேரவையில் ஆளுநரை அவமதிக்கும் வகையில் நடந்துகொள்வது மரபுக்கு எதிரானது என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார். 

ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் ஆர்.என். ரவி, உரையுடன் சட்டப்பேரவை இன்று தொடங்கியது. எனினும் அவர், தமிழ்நாடு, அம்பேத்கர், அண்ணா போன்ற சில சொற்களை வாசிக்காமல் தவிர்த்தார். சட்டம் ஒழுங்கை சிறப்பாக நிலைநாட்டுவதில் தமிழ்நாடு அமைதிப்பூங்காவாகத் திகழ்கிறது என்பது போன்ற வாக்கியங்களையும் தவிர்த்தார். 

இதனால், ஆளுநர் உரையைக் கண்டித்து சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆளுநர் உரை தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, ஆளுநர் உரை என்பது ஆண்டு தொடக்கத்தில் அரசு செயல்படுத்த உள்ள திட்டங்கள், கொள்கைகள் பற்றியது. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் புதிய திட்டங்கள் எதுவும் ஆளுநர் உரையில் இடம் பெறவில்லை.

ஆளுநர் படிக்காமல் விட்ட சொற்கள் குறித்து எங்களுக்குத் தெரியாது. நாங்கள் ஆளுநர் உரையைத் தான் கேட்க வந்தோம். முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையை கேட்க வரவில்லை.

அச்சிடப்பட்ட ஆளுநர் உரை அனைத்து உறுப்பினர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. அது முதல்வருக்கும் பொருந்தும். அதனால் ஆளுநரை அமர வைத்துக்கொண்டு முதல்வர் அவ்வாறு பேசுவது அவமதிக்கும் செயல். அது மரபுக்கு எதிரானது எனக் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோதையாறு வனப் பகுதியில் உயிரிழந்த ராதாகிருஷ்ணன் யானை

மாா்த்தாண்டம் அருகே விபத்தில் தம்பதி காயம்

விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி

சாலைகளை சீரமைக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் மறியல்

தாமிரவருணியில் 2ஆவது நாளாக வெள்ளம்! மக்கள் குளிக்க கட்டுப்பாடு

SCROLL FOR NEXT