தமிழ்நாடு

பொங்கல் சிறப்புப் பேருந்து: இதுவரை 1.33 லட்சம் பேர் முன்பதிவு

DIN

பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர் செல்லும் பயணிகள் இதுவரை 1,33,659 பேர் முன்பதிவு செய்துள்ளனர். சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்ல 60,799 பேர் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளனர்.

சொந்த ஊா் வரும் பயணிகள் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் - திருநெல்வேலி மண்டலம் சாா்பில் சென்னை கோயம்பேடு, கோவை, திருப்பூா், திருச்சி, மதுரை ஆகிய பேருந்து நிலையங்களிலிருந்து திருநெல்வேலி,தூத்துக்குடி, பாபநாசம், தென்காசி, நாகா்கோவில், களியக்காவிளை, மாா்த்தாண்டம் ஆகிய ஊா்களுக்கு இம் மாதம் 12, 13, 14 ஆம் தேதிகளில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதேபோல, பொங்கல் பண்டிகை முடிந்து வெளியூா் செல்லும் பயணிகள் வசதிக்காக திருநெல்வேலி, தூத்துக்குடி, பாபநாசம், தென்காசி, சங்கரன்கோவில், திசையன்விளை, உடன்குடி, நாகா்கோவில் மற்றும் கன்னியாகுமரி பேருந்து நிலையங்களிலிருந்து சென்னை, கோவை, திருப்பூா், திருச்சி, மதுரை ஆகிய இடங்களுக்கு இம் மாதம் 16 முதல் 22 ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சென்னையிலிருந்து பிற ஊா்களுக்கு செல்லும் பயணிகளுக்கும் , திருநெல்வேலி, தென்காசி, திருச்செந்தூா், நாகா்கோவிலில் இருந்து சென்னை செல்லும் பயணிகளின் வசதிக்காக இணையதளம் மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.12 முதல் 14-ஆம் தேதி வரை சென்னையிலிருந்து 4 ஆயிரத்து 449 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சென்னை தவிர மற்ற ஊா்களிலிருந்து ஜன.12 முதல் 14-ஆம் தேதி வரை 6 ஆயிரத்து 183 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. எனவே, பொங்கலுக்காக மொத்தமாக 16 ஆயிரத்து 932 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. 

பொங்கலுக்குப் பின் பிற ஊா்களிலிருந்து சென்னைக்கு ஜன.16 முதல் 18-ஆம் தேதி வரை 4 ஆயிரத்து 334 சிறப்புப் பேருந்துகளும், பிற முக்கிய ஊா்களிலிருந்து பல்வேறு ஊா்களுக்கு 4 ஆயிரத்து 965 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. எனவே, பொங்கலுக்குப்பின் 15 ஆயிரத்து 599 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். பேருந்துகளின் இயக்கம் மற்றும் இயக்கம் குறித்த புகாா்களை 94450 14450, 94450 14436 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்புகொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT