தமிழ்நாடு

திட்டக்குடி அருகே 11 சந்தன மரங்கள் திருட்டு!

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே 11 சந்தன மரங்களை வெட்டி திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

DIN

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே 11 சந்தன மரங்களை வெட்டி திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திட்டக்குடி வட்டம், ராமநத்தம் காவல் சரகம், மா.புடையூர் கிராமத்தில் காட்டுக்கொட்டகையில் வசித்து வருபவர் நாராயணசாமி (70) விவசாயி. இவர், தனக்கு சொந்தமான நிலத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்னர் அரசின் அனுமதி பெற்று சந்தனம் மரம் நட்டு வளர்த்து வந்தார். தற்போது, இந்த மரங்கள் வெட்டும் பருவத்தில் இருந்ததாம். 

இந்நிலையில், திங்கள்கிழமை இரவு நாராயணசாமி நிலத்திற்கு வந்த மர்ம நபர்கள் அங்கிருந்த 11 மரங்களை வெட்டி எடுத்துச் சென்றனர்.

இதுகுறித்து, ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

SCROLL FOR NEXT