தமிழ்நாடு

ரஜினி - சந்திரபாபு நாயுடு திடீர் சந்திப்பு

DIN

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை நடிகர் ரஜினிகாந்த் நேற்று சந்தித்துப் பேசினார்.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்துவருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். 

ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் இந்தப் படத்தில் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

விருவிருப்பாக நடைபெற்றுவரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் 50 சதவிகிதம் முடிந்து விட்டதாக தகவல் வெளியானது. ‘ஜெயிலர்’ படத்தை 2023, ஏப்ரல் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. 

நடிகர் ரஜினிகாந்த் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வீட்டிற்கு நேற்று சென்றார். அவரை  சந்திரபாபு நாயுடு பொன்னாடை அணிவித்து வரவேற்றார் .

இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என கூறப்படுகிறது. இந்த சந்திப்பில் ஜெயிலர் திரைப்பட படப்பிடிப்பு குறித்து சந்திரபாபு நாயுடு கேட்டறிந்ததாகவும், ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து சந்திரபாபு நாயுடு கேட்டறிந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திர, தமிழ்நாடு அரசியல் சூழல்கள் குறித்து விவாதித்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

SCROLL FOR NEXT