ஆளுநர் விவகாரம் தொடர்பாக தில்லியில் குடியரசுத் தலைவரை நாளை சந்தித்து முறையிட திமுக திட்டமிட்டுள்ளது.
குடியரசுத் தலைவரை நாளை காலை திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர். பாலு தலைமையில் திமுகவினர் சந்திக்கவுள்ளனர்.
இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் கடந்த 9ஆம் தேதி தொடங்கியது. அப்போது கூட்டத்தொடரின் தொடக்க உரையில், தமிழ்நாடு, பெரியார், அம்பேத்கர், காமராஜர், அண்ணா, கருணாநிதி பெயர்களை உச்சரிக்க ஆளுநர் மறுத்துள்ள சம்பவம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
அன்றைய தினம் ஆளுநர் அவையில் இருக்கும்போதே முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து தீர்மானம் இயற்றினார். இதேபோன்றும் தமிழகமெங்கும் கண்டன சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டன.
மேலும், ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் எனவும் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டன. ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதித்த மசோதா உள்ளிட்ட பல மசோதாக்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஆளுநர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற குழு தலைவர் டி. ஆர். பாலு தலைமையில், திமுகவினர் குடியரசுத் தலைவரை நாளை சந்தித்து பேசவுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.