வண்டலூர் உயிரியல் பூங்கா 
தமிழ்நாடு

காணும் பொங்கலுக்குத் தயாராகி வரும் வண்டலூர் பூங்கா

சென்னையை அடுத்த வண்டலூரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா காணும் பொங்கலுக்குத் தயாராகி வருகிறது.

DIN

சென்னை: சென்னையை அடுத்த வண்டலூரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா காணும் பொங்கலுக்குத் தயாராகி வருகிறது.

வழக்கமாக வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் வண்டலூர் பூங்காவுக்கு விடுமுறை விடப்படும் என்றாலும் வரும் செவ்வாய்க்கிழமை காணும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதனால் அன்றைய தினம் வண்டலூர் பூங்கா திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜன. 17ஆம் தேதி காணும் பொங்கலை முன்னிட்டு, அதிகமானோர் வண்டலூர் பூங்காவுக்கு வருவார்கள் என்பதால் அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

வண்டலூர் பூங்காவில் 20 டிக்கெட் கவுண்டர்கள் அமைக்கப்பட்டு, அன்றைய தினம் கூட்டத்தை தவிர்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், வண்டலூர் பூங்காவுக்கு செவ்வாயன்று 150க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீடே வெறிச்சோடி இருக்கு.. மதன் பாப் மறைவுக்கு செல்லாத நடிகர்கள்!

கவினின் தந்தைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

உத்தரப் பிரதேசத்தில் கால்வாயில் கார் கவிழ்ந்ததில் 11 பேர் பலி !

5 ஆண்டுகள் விளையாடுவேன், ஆனால்... ஓய்வு குறித்து தோனி!

டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சிவாங்கி!

SCROLL FOR NEXT