முகப்பு
தமிழ்நாடு

பேருந்து, மெட்ரோ, புறநகர் ரயிலில் பயணிக்க ஒரே டிக்கெட்: விரைவில்

ஒரே பயணச்சீட்டில் மாநகரப் பேருந்து, புறநகர் ரயில் மற்றும் மெட்ரோ ரயில் அல்லது இந்த போக்குவரத்துச் சேவைகளில் ஏதேனும் இரண்டில் பயணிக்கும் வசதி விரைவில் நிஜமாகவிருக்கிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:42 PM
பேருந்து, மெட்ரோ, புறநகர் ரயிலில் பயணிக்க ஒரே டிக்கெட்: விரைவில்
பகிர்:

ஒரே பயணச்சீட்டில் மாநகரப் பேருந்து, புறநகர் ரயில் மற்றும் மெட்ரோ ரயில் அல்லது இந்த போக்குவரத்துச் சேவைகளில் ஏதேனும் இரண்டில் பயணிக்கும் வசதி விரைவில் நிஜமாகவிருக்கிறது.

இதற்கான நிதி மற்றும் தகவல்தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்துமாறு சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து கழகம், சி-டிஏசி மையத்தை  (சென்டிரி ஆஃப் டெவலப்மென்ட் ஆஃப் அட்வான்ஸ் கம்ப்யூட்டிங்)அணுகியிருக்கிறது. இதையடுத்து, இந்த திட்டத்தை எவ்வாறு செயல்படுத்தப்போகிறோம் என்பது குறித்த செயல்முறை விளக்கம் காண்பிக்கப்பட்டுள்ளது.

இதற்காக, க்யூஆர் கோடு- முறையிலான டிக்கெட் வழங்கும் திட்டம் உருவாக்கப்படுகிறது. மெட்ரோ, பேருந்து, புறநகர் ரயில் என தனித்தனி க்யூஆர் கோடுகள் வழங்கப்படும். இந்த செயலில், மூன்று க்யூஆர் கோடுகளும் காண்பிக்கப்படும். பயணி, தான் செல்ல வேண்டிய இடத்தைத் தேர்வு செய்ததும், அவர் எந்தெந்த போக்குவரத்தை நாட வேண்டும் என்ற தகவல் தெரிவிக்கப்படும். அதற்கேற்ப டிக்கெட் வழங்கப்படும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தனி நபர்களுக்கும், குடும்பத்தினருக்கும் ஒரே டிக்கெட் அல்லது குடும்பத்தினர் வேறு வேறு இடங்களுக்குச் செல்வதாக இருந்தால் தனித்தனி டிக்கெட் என பல்வேறு வசதிகள் சேர்க்கப்படவிருக்கிறது.

தற்போது சி-டிஏசியின் செயலி ஏற்கனவே இருக்கிறது. இதில், தற்போது டிக்கெட் வழங்கும் வசதி விரைவில் இணைக்கப்படவிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை மாநகரின் ஒட்டுமொத்த மக்கள் தொகைக்கு 13,400 பேருந்துகள் சர்வதேச தரத்துடன் இயக்கப்பட வேண்டியது அவசிம். பேருந்துகள் குறைவாக இருப்பதால்தான் பலரும் ஷேர்ஆட்டோக்களை நாடுகிறார்கள். எனவே, தேவையான அளவுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டால், இந்த திட்டம் நன்கு பயன்படும், என்றும், இந்த திட்டத்தின் மூலம் பேருந்தில் பயணிக்கும் நபர்களின் எண்ணிக்கையும் உயரும் என்றும் நகர திட்டத் துறை உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதும், மாநகரப் பேருந்து மற்றும் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நாள்தோறும் பணிக்குச் செல்லும் லட்சக்கணக்கானோர் ஒன்றுக்கும் மேற்பட்ட பொதுப் போக்குவரத்துச் சேவையை பயன்படுத்தி வருகிறார்கள்.

இவர்கள் எளிதாக டிக்கெட் எடுத்து, விரைவாக பயணிக்கும் வகையில், பொதுப் போக்குவரத்துச் சேவைகளுக்கு ஒரே டிக்கெட் என்ற வசதி விரைவில் அறிமுகமாகவிருக்கிறது.

ஒரே நபர், மூன்று போக்குவரத்துச் சேவையையும் பயன்படுத்த வேண்டும் என்றால், தனித்தனியே பயணச் சீட்டு வாங்கும் சிரமம் இதன் மூலம் தவிர்க்கப்படும்.

இந்த திட்டத்தின் கீழ், மாநகரப் போக்குவரத்தின் கீழ் இயங்கும் பேருந்து, சென்னை மெட்ரோ நிர்வாகத்தின் கீழ் இயங்கும் மெட்ரோ ரயில்கள், தெற்கு ரயில்வேயின் கீழ் இயங்கும் புறநகர் ரயில்களை இணைத்து சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்துக் கழகம் அமைக்கப்பட்டுள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →