தமிழ்நாடு

'தமிழ்நாடு' எனக் குறிப்பிட்டு ஆளுநர் பொங்கல் வாழ்த்து!!

பொங்கல் பண்டிகையையொட்டி ஆளுநர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தமிழ்நாடு ஆளுநர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

DIN

பொங்கல் பண்டிகையையொட்டி ஆளுநர் ஆர்.என். ரவி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தமிழ்நாடு ஆளுநர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆளுநர் மாளிகையில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழக ஆளுநர் என்று குறிப்பிடப்பட்டதால் சர்ச்சை  எழுந்தது. அதேபோன்று பொங்கல் அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் இலச்சினையும் தவிர்க்கப்பட்டிருந்தது. இதனால் ஆளுநரின் பொங்கல் விழாவில் தமிழக அரசு சார்பில் யாரும் பங்கேற்கவில்லை.

இந்நிலையில் ஆளுநர் இன்று விடுத்துள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில், தமிழக ஆளுநர் என்பதற்கு பதிலாக, தமிழ்நாடு ஆளுநர் என்று குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் எனக் குறிப்பிட்டதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் தமிழ்நாடு ஆளுநர் எனக் குறிப்பிட்டு ஆளுநர் ஆர்.என். ரவி பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 6

தில்லியில் லாலு பிரசாத் யாதவிற்கு கண் அறுவை சிகிச்சை

சூர்யா - 47... காவல்துறை அதிகாரிதானாம்!

நரை முடி நீங்க..!

அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் முதல் நாள் வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT