தமிழ்நாடு

கோவையில் கிறிஸ்தவ ஆலயத்தில் பொங்கல் பண்டிகை விழா!

கோவையில் கிறிஸ்தவ ஆலயத்தில் ஞாயிற்றுகிழமை சிறப்பு பிரார்த்தனையுடன் நடைபெற்ற  பொங்கல் பண்டிகை விழா அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

DIN

கோவையில் கிறிஸ்தவ ஆலயத்தில் ஞாயிற்றுகிழமை சிறப்பு பிரார்த்தனையுடன் நடைபெற்ற  பொங்கல் பண்டிகை விழா அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

உழவர்களின் திருநாளாகவும், அறுவடை திருநாளாகவும், உழைப்பை போற்றும் பண்டிகையாகவும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அனைத்து தரப்பினரும் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் நிலையில் கோவையில், மத நல்லிணகத்திற்கு எடுத்துகாட்டாக இஸ்லாமியர்கள் இணைந்து பேரூர் ஆதின வளாகத்தில் பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.

இந்நிலையில் கோவையில் கிறிஸ்தவ ஆலய வளாகத்தில்  பொங்கல் பண்டிகையை கிறிஸ்தவர்கள் நடத்தி மீண்டும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி உள்ளனர். கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்து நாதர் ஆலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனையில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக, பாரம்பரிய உடை அணிந்து, ஆலய வாசலில் சாணம் தெளித்து, கோலம் இட்டு,  மாவிலை, தோரணங்கள், மாட்டு வண்டி என , தமிழ்வழி பண்பாடு இசை கருவிகளுடன் கிறிஸ்தவ பாடல்களை பாடி, திருச்சபை மக்கள் சேர்ந்து பொங்கல் வைத்து, கொண்டாடியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3-வது முறையாக இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா; இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!

பிகார் முதல்வர் பதவி அவர்களின் மகன்களுக்கு அல்ல! - லாலு, சோனியாவை சீண்டிய அமித் ஷா

சூடானில் 460 பேரைக் கொன்ற துணை ராணுவப் படை!

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம்!

புஷ்கர் கால்நடை கண்காட்சி! ரூ. 35 லட்ச ரூபாய்க்கு விற்பனையான எருமை “யுவராஜ்!”

SCROLL FOR NEXT