தினமும் உயரும் தங்கம்: அதிர்ச்சியில் மக்கள்!
சென்னையில் ஆபரணத் தங்கம் இன்று மீண்டும் உயர்ந்து 43 ஆயிரத்தை நெருங்கி வருகின்றது.
சென்னையில் ஆபரணத் தங்கம் இன்று மீண்டும் உயர்ந்து 43 ஆயிரத்தை நெருங்கி வருகின்றது.
தங்கம் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் கண்டு வருவது தொடர்ந்து நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த ஒரு மாதமாக தங்கத்தின் விலை ஏற்றம் கண்டு வருகிறது.
டிச.31ஆம் தேதி முதல் ஒரு சவரன் ரூ.41,040 ஆக உயர்ந்து விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடந்த ஒரு மாதமாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஜனவரி 9-ம் தேதி 42 ஆயிரத்தைத் தாண்டிய நிலையில், இன்று மேலும் உயர்ந்துள்ளது.
இந்நிலையில், ஜன.15ஆம் தேதியான இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.21 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,317 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் சவரனுக்கு ரூ.168 உயர்ந்து ஒரு சவரன் ரூ.42,536 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
அதேசமயம், வெள்ளியின் விலை ரூ.80 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.75.80 ஆகவும், ஒரு கிலோ ரூ.800 உயர்ந்து ரூ.75,800 ஆக விற்பனை செய்யப்படுகிறது.