தமிழ்நாடு

பழனி கும்பாபிஷேகம்: ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்!

பழனியில் கும்பாபிஷேக விழாவை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு ஆன்லைனில் முன்பதிவு டிக்கெட் இன்று முதல் வழங்கப்படுகிறது. 

DIN

பழனியில் கும்பாபிஷேக விழாவை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு ஆன்லைனில் முன்பதிவு டிக்கெட் இன்று முதல் வழங்கப்படுகிறது. 

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாவது படை வீடாக போற்றப்படும் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு 2023 ஜனவரி 27-ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. கடைசியாக பழனி கோயிலுக்கு கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 

இக்கோயிலின் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்ளும்பக்தர்கள் கோயில் இணையதளம் மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

www.palanimurugan.hrce.tn.gov.in, www.hrce.tn.gov.in என்று இணையதளத்திற்கு சென்று ஆதார், பான் கார்டு, வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட், வங்கி பாஸ்புக், ஓட்டுநர் உரிமம் இவற்றில் ஏதாவது ஒரு அவண எண்ணை சமர்ப்பித்து, அதோடு தொலைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை கொடுத்து முன்பதிவு செய்ய வேண்டும்.

ஜன. 18-ம் தேதி முதல் ஜன.20-ம் தேதி வரை கட்டணம் இல்லாமல் முன்பதிவு செய்து கொள்ளலாம். முதலில் முன்பதிவு செய்யும் 2,000 பக்தர்கள் மட்டுமே கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க அனுமதி வழங்கப்படுவார்கள். 

முன்பதிவு செய்தவர்களுக்கு ஜனவரி 22-ம் தேதி இ-மெயில் , எஸ்எம்எஸ் மூலம் முன்பதிவு உறுதி செய்யப்படும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கேட்பாரற்று கிடந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

மேம்பாலம் கட்டுமானப் பணி: அமைச்சா் ஆய்வு

காவல் சாா்பு ஆய்வாளா் பணியிடத் தோ்வு: 864 போ் பங்கேற்பு!

SCROLL FOR NEXT