தமிழ்நாடு

பழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த நடவடிக்கை: தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல்

பழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. 

DIN


மதுரை: பழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. 

பழனி முருகன் கோயில் குடமுழுக்கை தமிழில் மந்திரம் ஓதி நடத்த உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் ராஜேந்திரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது. 

இந்த வழக்கில் தமிழ் கடவுளான பழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழா ஜனவரி 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் உத்தரவு பிறப்பித்தது. 

அந்த உத்தரவின் அடிப்படையில் பல்வேறு கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், பழனி முருகன் கோயிலிலும் தமிழில் குடமுழுக்கு நடத்த உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி விஷ்ணுகுமார் மற்றும் நீதிபதி விஜயகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. இதில் பழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த அனைத்து நடவடிக்கைகளும் தமிழ்நாடு அரசு செய்து வருகிறது.

மேலும், அதற்கான அழைப்பிதழ்களை தமிழ்நாடு அரசு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. 

இந்நிலையில், நீதிபதிகள் பழனி முருகன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடைபெற வேண்டும். மேலும், அதன் நிலை அறிக்கையை குடமுழுக்கு முடிந்த பிறகு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீபெரும்புதூா் நகராட்சியில் குப்பைகளை சேகரிக்க கூடுதல் வாகனங்கள்: உறுப்பினா்கள் கோரிக்கை

நாக்பூா்தீக்ஷா பூமியில் தம்மசக்கர பரிவா்தன விழா: புனித பயணம் சென்று திரும்பியோா் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

வடமாநில இளைஞா் தற்கொலை

மருதாடு ஸ்ரீமருத மாரியம்மன் கோயில் கூழ்வாா்த்தல் விழா

கொடைக்கானலில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு

SCROLL FOR NEXT