மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 883 கன அடியாகச் சரிவு
காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து சரிந்து வருகிறது.
காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து சரிந்து வருகிறது.
வெள்ளிக்கிழமை காலை அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 883 கன அடியாக சரிந்தது. கடும் வறட்சி காலங்களில் மட்டுமே மேட்டூர் அணையின் நீர்வரத்து ஆயிரம் கன அடிக்கு கீழே சரியும். ஆனால் நடப்பு ஆண்டில் வெள்ளிக்கிழமை மேட்டூர் அணை நீர்மட்டம் ஆயிரம் கன அடிக்கு கீழே சரிந்துள்ளது.
வியாழக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 1,022 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர் வரத்து வெள்ளிக்கிழமை காலை வினாடிக்கு 883 கன அடியாக சரிந்துள்ளது.
இதையும் படிக்க | காவல் நிலையத்தில் மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்: சட்டம்-ஒழுங்கு ஆய்வுக் கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின்
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனப்பகுதிகளில் பாசனத் தேவை குறைந்ததால் பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கன வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் வியாழக்கிழமை காலை 108.37அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 107.79அடியாக சரிந்தது.
அணையின் நீர் இருப்பு 75.30 டி.எம்.சியாக உள்ளது.