தமிழ்நாடு

இடைத்தேர்தல்: ஓபிஎஸ் நாளை முக்கிய அறிவிப்பு

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாளை காலை 8 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். 

DIN

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாளை காலை 8 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். 

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் திருமகன் ஈவெரா மறைவையடுத்து இத்தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 31 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் மாா்ச் 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் போட்டியிடவுள்ள நிலையில் அதிமுக கூட்டணியில் அதிமுகவே போட்டியிடும் சூழல் உள்ளது. 

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக-பாஜக இடையே நாளை பேச்சுவார்த்தை நடக்கிறது.  நாளை மாலை 4 மணிக்கு பாஜக தலைமை அலுவலகமான சென்னை கமலாலயத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் அதிமுக மூத்த தலைவர்கள் நாளை பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். 

இதனிடையே முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாளை காலை 8 மணிக்கு தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்திக்கிறார். அப்போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக முக்கிய அறிவிப்பை அவர் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கைகுலுக்க மறுத்த விவகாரம்: பாகிஸ்தான் போட்டிகளில் இருந்து நடுவர் பைகிராஃப்ட் நீக்கம்!

மாணவர்களுக்கு கல்வி கடன் வட்டி தள்ளுபடி: முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு

சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்ற விண்கலனில் என்ஜின் கோளாறு! 5,000 கி. சரக்குடன் சுற்றுப்பாதையில் சிக்கியது!

தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!

ஓடிடி தளத்தில் இருந்து குட் பேட் அக்லி நீக்கம்!

SCROLL FOR NEXT