தமிழ்நாடு

தை அமாவாசை:  தூத்துக்குடி கடற்கரையில் ஆயிரக்கணக்கானோர் வழிபாடு

DIN

தூத்துக்குடி: தை அமாவாசையை முன்னிட்டு, தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் இன்று அதிகாலை முதல் ஆயிரக்கணக்கானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

தை மாதத்தில் வரும் அமாவாசை தினத்தன்று தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டால் தோஷங்கள் நீங்குவதுடன் நன்மை கிடைக்கும் என்பது ஐதீகம்.

மேலும், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து கடலில் நீராடி வழிபடுவதன் மூலம் முன்னோர்களின் ஆன்மா சாந்தி அடைந்து சுப நிகழ்வுகள் நடைபெறும் என்றும் கருதப்படுகிறது.

அதன்படி, தை அமாவாசையை முன்னிட்டு தூத்துக்குடி புதிய துறைமுகம் கடற்கரை, திரேஸ்புரம் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சனிக்கிழமை அதிகாலையில் திரண்டனர்.

பின்னர், அவர்கள் கடலில் நீராடி, தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். இதனால் தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

கல்கி - வில்லனாக கமல்ஹாசன்?

என்ன விலை அழகே... ஸ்ரீமுகி!

கொளுத்தும் கோடை வெயில்: தில்லிக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’

பகல் நிலவு.. அதிதி போஹன்கர்!

SCROLL FOR NEXT