தமிழ்நாடு

இடைத்தேர்தல்... விருப்பமுள்ளோர் விருப்பமனு அளிக்கலாம்: அதிமுக அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவில் போட்டியிட விரும்புவோர்  திங்கள்கிழமை முதல் விருப்பமனு அளிக்கலாம் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

DIN


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவில் போட்டியிட விரும்புவோர்  திங்கள்கிழமை முதல் விருப்பமனு அளிக்கலாம் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. 

இதனை முன்னிட்டு அதிமுக சார்பில் போட்டியிட விருப்புகின்ற கழக உறுப்பினர்கள்  அதிமுக தலைமைக் கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் திங்கள்கிழமை (ஜன.23) முதல் வியாழக்கிழமை (ஜன.26) ஆம் தேதி வரை நாள்தோறும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, விண்ணப்பக் கட்டணத் தொகையாக ரூ.15,000 செலுத்தி, விருப்ப மனு விண்ணப்பப் படிவங்களை பெற்று, கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து உடனடியாக அளிக்கலாம் என கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

தேசிய பால் நாள்: விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்!

SCROLL FOR NEXT