தமிழ்நாடு

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

DIN

தேனி மாவட்டம் சுருளி அருவியில் செவ்வாய்க்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

தேனி மாவட்டத்தில் புகழ் பெற்றது  சுருளி அருவி. ஆண்டு முழுவதும் நீர் வரத்து இருப்பதால் சுற்றுலா பயணிகள் வருகை இருக்கும். 

திங்கள்கிழமை இரவு மழை பெய்ததால் அருவியின் நீர் வரத்து ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. செவ்வாய்க்கிழமை அருவியின் நீர் வரத்தை கண்காணித்த ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தினர், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதித்தனர்.

இதுபற்றி கம்பம் கிழக்கு வனச்சரகர் பிச்சைமணி கூறுகையில், அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்தவுடன் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

சிவகார்த்திகேயன் சொத்து மதிப்பு இவ்வளவா?

பார்வை ஒன்று போதுமே... சாக்ஷி அகர்வால்!

கண் பேசும் வார்த்தை... அதிதி ஷங்கர்!

டி20 உலகக் கோப்பைக்கான ஜாகீர் கானின் இந்திய அணியை தெரிந்து கொள்ள வேண்டுமா?

SCROLL FOR NEXT