தமிழ்நாடு

ஈரோட்டில் 74 ஆவது குடியரசு நாள் கொண்டாட்டம் !

DIN


ஈரோடு: ஈரோடு வ.உ.சி.பூங்கா மைதானத்தில் நடைபெற்ற 74 ஆவது குடியரசு நாள் விழாவையொட்டி மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி மூவர்ணக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். 

தொடர்ந்து, காவல்துறை மற்றும் தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். 

இதனைத் தொடர்ந்து காவல் துறை, மருத்துவம், வேளாண்மை, பள்ளிக்கல்வி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட துறைகளில் சாதனை புரிந்த 400க்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தார். 

இதனையடுத்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

வழக்கமாக குடியரசு நாள் விழாவில் 100க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு, லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். 

ஆனால், ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுவதால் இந்த ஆண்டு குடியரசு நாள் விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

SCROLL FOR NEXT