முகப்பு
தமிழ்நாடு

ஏற்காட்டில் லேசான நில அதிர்வு: பொதுமக்கள் அச்சம்!

ஏற்காடு சுற்றுவட்டாரப் பகுதியில் மிகப்பெரிய அளவில் சத்தத்துடன் லேசான நில அதிர்வு உணரப்பட்டதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். 

Updated On : 27 ஜனவரி, 2023 at 4:12 PM
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2024 at 6:24 PM

ஏற்காடு சுற்றுவட்டாரப் பகுதியில் மிகப்பெரிய அளவில் சத்தத்துடன் லேசான நில அதிர்வு உணரப்பட்டதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். 

இந்த நில அதிர்வால் ஏற்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகள், மின்விசிறி, டிவி உள்ளிட்ட அனைத்து பொருள்களும் அதிர்ந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக சிசிடிவி கட்சி வெளியாகியுள்ளது. 

இந்த நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் நில அதிர்வு குறித்து அதிகாரியிடம் கேட்டபோது அவ்வாறு பெரிய அளவில் உணரப்படவில்லை என்றும் சீஸ்மோகிராபியில் குறியீடுகள் காட்டவில்லை என்றும் தெரிவித்தனர். 

Advertisement

இருப்பினும், ஏற்காட்டில் நில அதிர்வின் காரணமாக வணிக வளாகங்கள் வீடுகள் உள்ளிட்ட  பகுதிகளில் நிலஅதிர்வு உணர்ந்ததாகவும், வெடிச் சத்தம் கேட்டதாகவும் மக்கள் தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.