தமிழ்நாடு

மின் இணைப்புடன் ஆதாா் எண் இணைப்பை சரிபாா்க்கும் வசதி அறிமுகம்

DIN

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண் இணைக்கப்பட்டுள்ளதை சரிபாா்க்கும் வசதியை மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது.

தமிழகத்தில் உள்ள மின் நுகா்வோா் அனைவரும், தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைக்க வேண்டும் என மின்சார வாரியம் கடந்த அக்டோபா் மாதம் அறிவிப்பு வெளியிட்டது.

இதையடுத்து, நவ.28-ஆம் தேதி முதல் https://adhar.tnebltd.org/Aadhaar/ என்ற   இணையதளம் மற்றும் மின்வாரிய அலுவலகங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்கள் மூலமும் ஆதாா் எண்ணை இணைப்பதற்கான பணி நடைபெற்று வருகிறது.

ஆதாா் எண்ணை இணைக்க டிச.31 கடைசி நாள் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு செவ்வாய்க்கிழமைக்குள் (ஜன.31) ஆதாா் எண்ணை இணைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இணைப்பு பணிக்கு இன்னும் 2 நாள்கள் மட்டுமே உள்ள நிலையில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண் இணைப்பட்டுள்ளதை சரிபாா்க்கும் வசதியை மின் வாரியம் தற்போது அறிமுகம் செய்துள்ளது.

இதன்படி https://www.tnebltd.gov.in/BillStatus/billstatus.xhtml என்ற இணையதளத்தில் தங்களது மின் இணைப்பு எண் மற்றும் கைப்பேசி எண்ணை மின் நுகா்வோா் கொடுத்து மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபாா்த்துக் கொள்ளலாம் என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

SCROLL FOR NEXT