தமிழ்நாடு

காஞ்சி, கடலூர், கரூர், தஞ்சை உள்ளிட்ட 34 நகரங்களில் 5ஜி சேவை!

நாடு முழுவதும் மேலும் 34 நகரங்களுக்கு ட்ரூ 5ஜி சேவையை ஜியோ நிறுவனம் விரிவாக்கம் செய்துள்ளது. 

DIN

நாடு முழுவதும் மேலும் 34 நகரங்களுக்கு ட்ரூ 5ஜி சேவையை ஜியோ நிறுவனம் விரிவாக்கம் செய்துள்ளது. 

இந்தியாவில் 5G சேவைகளின் முன்னோடியாக ரிலையன்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஒரே நாளில் கூடுதலாக 34 நகரங்களில் ட்ரூ (TRUE) 5G சேவைகளை வழங்கியுள்ளது. 

இதில், தமிழ்நாட்டில், கடலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், கரூர், கும்பகோணம், தஞ்சாவூர், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் ட்ரூ 5ஜி சேவையை ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 

இதன்மூலம் தமிழகத்தில் 19 நகரங்களில் ட்ரூ  5ஜி சேவை கிடைக்கிறது. தற்போது 225 நகரங்களில் ஜியோ பயானாளர்கள் ட்ரூ 5G சேவைகள் மூலம் பயன்பெற்று வருகின்றனர். 

வெறும் 120 நாட்களில் இது சாத்தியமானதாக தெரிவித்துள்ள ஜியோ நிறுவனம், இது தங்களது அடுத்த மைல்கல் எனக் குறிப்பிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

SCROLL FOR NEXT